Monday, September 10, 2012

அசோலா பாசி

கொசுவை விரட்டும் பாசி...
ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..!
கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம்.
அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். வ
ிவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு கொடுக்கும். அதனால், ஆயிரக்கணக்கில் செலவுசெய்து இரசாயன உரம் போட தேவையில்லை. அசோலாவை வளர்ப்பதால், வயலில் களைகளும் வளராது. நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment