Saturday, April 15, 2017

HOW TO INCREASE POSITIVE ENERGY IN OUR HOUSE.....

HOW TO INCREASE
POSITIVE ENERGY
IN OUR HOUSE.....

1) Open all windows in the house and allow fresh air and sunshine to enter the house. Free flowing air and sun are negative energy removers

2. Dispose of all the old unwanted things lying in the house. Clutter is a negativity magnet. It attracts and accumulates negative energy in the house.

3). Walking barefoot in the house helps all your negative energy to be absorbed by the earth.
Grounding is important to keep the energy balance in our body.

4) In the olden days, footwears were kept out of the house. People used to enter the house only after washing feet with water. This action ensures that all the negativity remains outside or are grounded by earth and does not enter the house. Now it has become difficult to keep the footwear outside. So preferably remove them near the entrance door.

5) Go out in the open air. Take walks in the garden or open ground. Being amongst nature re-energizes or charges you fully.

6) Sweeping the floor also ensures that the negative energies are shaken and moved out with the dirt.

7)  Rock salt is another negativity remover. Wash or mop your floor with a fistful rock salt in a bucket of water. This ensures that every nook and corner of the house is rid of negative energy.

8) Potted plants or trees around your house or society also ensures more positive energy in the house and area.

9) Bathing or Soaking your legs and hands in rock salt water once in a while removes the negativity attached to your body and cleanse your aura.

11)   Repetition of Prayers,  increases the positive vibrations in the house. 100%

11)  Keep your thoughts, action and speech Positive. Negative thoughts will bring in negative vibes. So avoid all negative thoughts, speech and actions.

12) Keep your house well lit and illuminated. Light removes negativity.

13) Keep faith in God and in yourself.

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும்

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும்
அற்புதமான விஞ்ஞான காரணங்கள்...!!!
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆனால், அனைத்து இந்து சடங்குகளும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

பொதுவாகவே மூட நம்பிக்கைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் வளர்த்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது இந்து மதம். ஆனால் உண்மை மிகவும் அப்பாற்ப்பட்டது இது. இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள விஞ்ஞான வடிவிலான மதங்களில் ஒன்றாகும். அதன் வழக்கங்களும் மரபுகளும் காரண காரியத் தொடர்புடைய விஞ்ஞான காரணங்களை அதன் பின் வைத்திருக்கும். ஒவ்வொரு சடங்குகளும் நாம் நலமுடன இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது தனிப்பட்டவரின் செய மேம்பாட்டுக்கும் உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பழங்கால மரபுகளுக்கு பின்னால் உள்ள அற்புதமான விஞ்ஞான காரணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும். வாங்க பார்க்கலாம்

நமஸ்காரம் :-

நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.

மெட்டி:-

திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

பொட்டு:-

ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ளல ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும்.

கோவில் மணிகள் :-

கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.

துளசியை வழிபடுதல்:-

இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.

அரசமரம்:-

பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.

உணவருந்திய பின் இனிப்பு உண்ணுது:-

இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.

கைகளில் மருதாணி  வைப்பது:-

அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.

தரையில் அமர்ந்து உண்ணுவது:-

நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்
காலையில் சூரியனை வழிபடுதல்:-
விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

கோவிலை வலம் வாருங்கள்:-

காலைல எழுந்து வேகமாக நடை பயணம் போகிறோம் . உடல் ஆரோக்கியத்திற்காக வைற்றை குறைக்க ... பிறகு அதற்க்கு தேவையான அளவு ஐஸ் கிரீம் சாப்ட எப்டி விறு குறையும் ... கொஞ்சம் யோசிங்க ... உடல் ஆரோக்கியம் பெற வேண்டுமானால் .......அதன் கூட புண்ணியமும் சேரும் ...அதெப்டி என்றுகேட்கிரீர்கள ....
உடல் ஆரோக்கியத்திற்கு .... காலை வேளையல்.சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும் அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும் , வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும் .இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன , பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து ,வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள் , புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும் .இதற்க்க்காகத்தன் வெளிபிரகாரங்களை அமைத்து இருக்கிறார்கள் , நம் முன்னோர்கள் , சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளி பிரகாரத்தில் பார்த்தல் உங்களுக்கே தெரியும் .புதுவை அதாவது பாண்டிச்சேரி அருகில் உள்ள வில்லியனூர் ,திருகாமீச்வரர் ஆலயத்திலும் காணலாம் , இதுதான் 2இன் 1 ,நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தவைகளை நாம் மறந்து போனோம், காலம் நாகரீகம் அடைந்ததால் ,எல்லாமே மாறி போச்சிபா ...சிவாலயங்கள் மட்டுமல்லாது ,மன்னர்கள் காலத்து கோவில்கள் அனைத்திலும் காணலாம்.

தானங்களின் பலன்கள்

தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது, 'நமக்கு மிஞ்சியது போக, மற்றவைகளை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அத்தகைய தானங்கள் பல வகைப்படும். தானம் செய்வதால் பலனும் கிடைக்கும். என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

தானங்களின் பலன்கள் :

🌀 அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும், சொர்க்கம் கிட்டும்.

🌀 வஸ்திர தானம் - ஆயுளை விருத்தி செய்யும்.

🌀 பு+மி தானம் - பிரமலோகத்தையும்,
🌀 கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பித்ரு கடன் ஆகியவற்றை அகற்றும்.

🌀 தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

🌀 கோ தானம் (பசு தானம்) - ரிஷிகடன், தேவகடன், பித்ரு கடன் போன்றவை தீரும்.

🌀 நெய், எண்ணெய் தானம் - நோய் தீர்க்கும்.

🌀 தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

🌀 வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

🌀 தேன் தானம் - தேனை ஒரு வெண்கலப் பாத்திரத்தில் வைத்து தானம் அளித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

🌀 நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

🌀 அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.

🌀 பால் தானம் - துக்கம் நீங்கும்.

🌀 தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

🌀 பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.

✌இரவு வணகம் அனைவர்கும் இப்படிக்கு தயானந்து பாகவதர்✌

'கழு' என்றொரு கோரை புல் வகை

💐💐💐💐💐💐💐💐💐💐💐
'கழு' என்றொரு கோரை புல் வகை உண்டு. அந்த வகை கோரை புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசனையை உணர முடியும். கழு கோரைப் புல்லினால் பாயின் அருகில் தேள், பூரன் உள்ளிட்ட விச பூச்சிகள் நெருங்காது. மேலும் கழு கோரை புல்லினால் பின்னப்பட்ட பாய்களில் படுத்து உறங்கினால் இயற்கையாகவே அதனுடைய மனமான கற்பூர வாசனையை நமது நாசிகள் உணரும். அதன் மருத்துவ குணங்கள் உடல் நலனை காக்கும். இப்படியாக *கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை* என்ற சொலவடை மறுவி 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்றானது. இனி பழமொழியை சரியாக சொல்வோமா.????

யார் வீட்டில் நெகிழி பாய் வைத்து உள்ளீர்களோ தூக்கி தூர எரியுங்கள்... பாய்களில் கூட முன்னோர்கள் மருத்துவத்தை வைத்துள்ளார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, April 9, 2017

BP - க்கு கைகண்ட மருந்து

BP - க்கு  கைகண்ட மருந்து

சீரகம் - 200 கிராம்
அமுக்கரா கிழங்கு - 100 கிராம்
கொத்தமல்லி - 100 கிராம்
ஏல அரிசி - 100 கிராம்
சுக்கு - 35 கிராம்
மிளகு - 35 கிராம்
திப்பிலி - 35 கிராம்
கற்கண்டு - 605 கிராம்

அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித்தனியாக சூரணம் செய்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

அளவு : 1/2 தேக்கரண்டி

தீரும் நோய்கள் : இரத்த அழுத்தம் (BP), கொழுப்புகளை கரைக்கும், இரத்த ஓட்டம் சீராகும், இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த குழாயில் அடைப்பு மற்றும் பல நோய்களை குணப்படுத்தும்

அனுபானம் : 1/2 தேக்கரண்டி மேலுள்ள சூரணம்,
1/2 எலுமிச்சை பழம் சாறு,
1/2 டம்பளர் தண்ணீர்,
2 தேக்கரண்டி தேன்

அனைத்தையும் ஒன்றாங்க கலந்து காலை / மாலை குடிக்க வேண்டும்.

இதில் சிருங்கி பற்பம் கிடைத்தால் வேளைக்கு 200 மில்லி கிராம் கலந்து கொடுக்க இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிக அற்புதமாக வேலை செய்யும். இந்த மருந்தை எடுப்பவர்கள் படிப்படியாக இரத்த அழுத்தத்திற்காக எடுக்கப்படும் மாத்திரை கைவிட்டு விடலாம்.

BP க்கு மாத்திரை எடுப்பவராயின் மாத்திரையை உடனே நிறுத்த கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த வேண்டும்.
 
மேலும் பயணிப்போம். . .

பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்



*பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்...*

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக நம்தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

*பித்தப்பையில் கற்கள் (Gallstones)*
அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் .
மேலும், இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.

தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.
அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

*பித்தப்பை கல் இருப்பது உறுதியானால்..*

1. அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும்.

2. வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

4. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

5. ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் ,

6. பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும்.
7. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

பித்தப்பை கல் நீங்க...
1. இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

2. எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

3. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

4. பத்து பங்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாகக் குறுக்கி வடிகட்டி அந்த நீரை ஒரு நாளில் பல தடவை சிறுகச் சிறுக பருகுவதின் வாயிலாக பித்தப்பை கற்கள் கரைவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

5.நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது

1. வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம்,

2. கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.
வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

3. உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.

4. வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

5. பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில அருகில் உள்ள (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ, அக்குபன்ச்சர்) மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துக் கொள்வது நல்லது.

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.

இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.

2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர்  சாப்பிடக்கூடாது.

3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.

5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன்  பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.

6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.

7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.

8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,
முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.

9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.

12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய் ஆகியவற்றைச்
சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்
சேர்த்து கொள்ளக்கூடாது.

14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,
புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,
அதிக காரம், அதிக புளிப்பு,
கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.
இந்த செய்தி உங்களுக்கு
பிடித்திருந்தால்   பகிர்ந்து நன்மை செய்யுங்கள்.
மிகவும் நன்றி.

பித்தம் குறைய எளிய பானம் தேவையான பொருட்கள்

பித்தம் குறைய எளிய பானம்
தேவையான பொருட்கள்
சீரகம் – 4 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 10 எண்ணிக்கை
காய்ந்த திராட்சை – 30 எண்ணிக்கை
பூண்டு – 3 பல் பூண்டு
கறிவேப்பிலை – 3 கொத்து காம்புடன்
பனைவெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
மேலே உள்ள பொருட்களை (1/2) அரை லிட்டர் தண்ணீரில் கலந்து இரவில் நன்றாக கொதிக்க வைக்கவும். 100 மில்லியாக ஆகும் வரை. பிறகு இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலை இலோசாக சூடாக்கி வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்தவும். 1 மணி நேரம் கழித்து வழக்கமான உணவு எடுத்துக்கொள்ளவும். வாரத்தில் 3 நாட்கள் அருந்தலாம். பித்தத்தில் மாறுபாடு தெரிந்த பின் வாரத்தில் 1 நாள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு: ஒருமுறை உபயோகித்த பொருட்களை பானத்தை வடிக்கட்டியவுடன் கீழே போட்டு விடவும். மறுபடியும் அதை உபயோகிக்க கூடாது.
அனுபவமுறை...

S U G A R I S* *P O I S O N*

🌈 *Please share this msg with your friends*

🌈  *S U G A R  I S*
         *P O I S O N*

🌈1. First factory to manufacture sugar was established by the British in 1866.

🌈2. Indians used to eat jaggery before this and seldom used to fall sick.

🌈3. To make sugar, sulphur is used, which is used in making fire crackers.
Sulphur is an element that, once it enters the body, it cannot be excerted from our body.

🌈4. Sugar increases cholesterol which is the main reason for heart attack.Sugar increases the weight of the body and thus we become fat.

🌈5. Sugar increases Blood Pressure. It is also the reason for Brain damaging clots.

🌈6. The sweetness in sugar is that of Sucrose, and this cannot be digested by human beings.

🌈7. To make sugar,
23 harmful ingredients / chemicals are used.

✔ Sugar is one of main reasons for getting diabetes.

✔ Sugar is the reason for burning in stomach.

✔ Sugar increases the level of Triglycerides in body.

✔ Sugar is the main reason for causing Paralysis.

✔ *Instead of sugar use jaggery.*

🌈 If you think this as an educative tip, then pls spread this information.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

எண்ணெய் தேய்த்து குளிப்பது, நம் பாரம்பரிய மரபு சார்ந்த பழக்க வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. அதனால், நம் முன்னோர், வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது ஒருவகையான ஆயுர்வேத முறையாகும். எண்ணெய் மூலம், பல நோய்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளனர்.

நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால், பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். குறிப்பாக, பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் எடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நல்லெண்ணையை தலைக்கும் தேய்த்து குளிக்கும் போது, அதை அடுப்பில் காய வைத்து, அதில் மூலிகைகள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின், வெதுவெதுப்பாக இருக்கும் போது தலையில் தேய்த்து, அரை மணி கழித்து, சுத்தமான சிகைக்காய் தூள் தேய்த்து குளிக்க வேண்டும்.

நோய்கள் அண்டாது
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. எண்ணெய் குளியல் மூலம் உடல் வெப்பம் தணிந்து கண்கள் குளிச்சியாகும். உடல் சூட்டால் வரும் நோய்கள், நம்மை அண்டாது. வாரம் ஒருமுறையாவது, நல்லெண்ணெய் குளியல் எடுத்து வருவது நல்லது. இதனால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும். வறண்ட தோல் உள்ளவர்களுக்கு, எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வை பெறும். நல்லெண்ணெய் குளியலின் மூலம் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக இருக்கும்.

தூக்க பிரச்னைக்கு தீர்வு
வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். உடலில் உள்ள நரம்புகள், ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எண்ணெய் குளியலில், தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். பொடுகுத் தொல்லை இருந்தால் தீரும். தூக்கமின்மை பிரச்னையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான  தூக்கத்தை பெறலாம். கம்ப்யூட்டர் முன், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் கெடும். எண்ணெய் குளியல் மூலம், பார்வைக்கு புது தெம்பு கிடைக்கும். முடி உதிர்தல் அதிகம் இருந்தால், நல்லெண்ணெய் குளியலை, வாரம் ஒருமுறை மேற்கொண்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

பழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் உண்ணக் கூடாது. காலை 5 மணி முதல் 7 மணி வரை தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்ட வேண்டும்

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.

அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.

அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எனர்ஜி

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது

இரைப்பைக் குடல் அழற்சி

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.

உடல் வெப்பத்தைத் தணிக்கும்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

புற்றுநோயைத் தடுக்கும்

வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

மலச்சிக்கல்

சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.

🅾❇பெண்கள் வெள்ளி நகை அணிவது எதற்காக

*🅾❇பெண்கள் வெள்ளி நகை அணிவது எதற்காக?*🔴


நகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து, மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம், நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

*உணர்ச்சி  வசப்படுதலை  கட்டுப்படுத்தும் வெள்ளி நகைகள்:*

உணர்ச்சி வசப்படுதல் என்பது, எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

வெள்ளிக்கொலுசு குதிகால் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை.

சின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைப்பாடுகள் கூடிய கொலுசுகள் எல்லாம் பழைய பணியாகிவிட்டன. தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவமைக்கப்படுகின்றன.

சில நகை தயாரிப்பாளர்கள் கொலுசையும் மெட்டியையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் மட்டும் அணியப்பட்டு வந்தது.
சில பெண்கள் ஒரே காலில் இரண்டு விதமான கொலுசுகளை அணிகிறார்கள்.

நாகரிக மங்கையர் தங்கம், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் லெதர், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பல வகை பொருட்களைக் கொண்டு நவீனபாணியில் தயாரித்த கொலுசுகளை அணிகின்றார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலி கொண்டு இணைக்கப்பட்டு இருக்கும். கொலுசு முழுக்க முத்துக்களை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்கள் இணைத்தோ தயாரிக்கப்படுகின்றன.

வெள்ளியிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆக்சிடைஸ்ட் வெள்ளி எப்போதும் நிறம் மங்கிக் காணப்படும். கொலுசுகள் இவ்வெள்ளியிலும் செய்யப்படுகின்றன.

செயற்கை கற்கள் அதாவது போல்கி கற்கள், குந்தன் கற்கள், குறை மணிக்கற்கள் (செமி பிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள், தற்போது பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.

வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.

வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும்.*

*புத்தி பேதலிக்கும். நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.மூச்சின் அளவும் அதிகரிக்கும்.அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள். இதில் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்றவர்களே செய்ய வேண்டும். பல எளிய முறை மூச்சுப்பயிற்சிகளும் உள்ளன.அவற்றைப் பின்பற்றினாலே நமக்கு பல நன்மைகள் விளையும். இதில் ஓஷோ கூறியுள்ள ஒரு தியானமுறையைப் பார்ப்போம்.*

*சுவாசத்தைக் கவனித்தல்(தியானம்)*
*"எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை.*
 *எளிதானதாகவுகிடைக்கமலோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும்.*

 *சுவாசத்தைக் கவனித்தல் என  பொருள்   இது மிகவும் எளிய முறை.*

 *எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.*

 *முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.*

*நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.*

*நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.*

 *பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.*

 *உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.*

*அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.*

 *சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.*

 *ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.*

*அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.*
*ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.*

காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."*

எண்ணங்களை  குறைத்தால் பேச்சுக் குறையும்.பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
 
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*

- வேதாத்திரி மகரிஷி

[07/04, 8:14 AM] ‪+91 91710 40806‬: "நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில் அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இதுதான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு.  இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் என்ற ஒரு நியதியை உணர்ந்து கொள்ள வேண்டும்.
.

எந்த பொருளும் அணுவினுடைய கூட்டு தான்.  ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.  அதிலிருந்து அலை வீசிக் கொண்டே இருக்கிறது.  எதிர்படும் ஒவ்வொரு அலையிலும் பதிவாகிறது.  அந்தப் பதிவு மீண்டும் மீண்டும் அதன் தன்மையாக (Character) மாறிவிடுகிறது.  இதையெல்லாம் பார்க்கும்பொழுது நாம் எந்த செயல் செய்தாலும் எந்த எண்ணம் எண்ணினாலும் அது நம் சொத்தாக கருமையத்தில் (Genetic Center) பதிவாகி விடுகின்றது.  அதற்கேற்ப விளைவு வருகிறது.  ஒரு மனிதனை நினைத்து அவன் நல்லவன் நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அவனை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.  அந்த அளவு நம் அலையே ஒரு நல்ல அலையாக மாறி,  அது செல்லும் இடமெல்லாம் அதே நல் விளைவைத் தரும்.
'

எண்ணத்தின் வலிமை:

"எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்
எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்திடல்".
.

"செயல்ஒழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம்,
சிக்கனம், இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்".
.

எண்ணத்தில் நிறைந்திடு :

"விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ
எண்ணத்தில் நிறைந்திடு, செய்கையில் சிறந்திடு."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
[07/04, 8:14 AM] ‪+91 91710 40806‬: உணர்ச்சிகளில்
மயங்காமல்
வாழும்
தெளிவு
நிலையே
விழிப்புநிலை
ஆகும்.

வாழ்க வளமுடன்! !

- வேதாத்திரி மகரிஷி

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...*

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...*

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!
☘🎄☘🎄☘🎄☘

வெயிலை வெறுக்காதீர்கள்

வெயிலை வெறுக்காதீர்கள் ,

வெயில் என்பது  இறைவனின் பெரும்  அருட்கொடையாகும்  வெயிலின் உஷ்ன.சக்தியை  கொன்டே உலகம் இயங்குகின்றது பனிகாலம் மழைகாலம் குளிர்காலம்  இவைகளைவிட வெயில்காலமே மிகவும்  சிறந்ததாகும் ,

வெயில் நம் மீது படும்போதுதான்  அதன்  சக்த்தியை  கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது , மூட்டுவலி  உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும் , தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்த படுகின்றது ,

பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது

நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில்காலத்திலேயே  அதிகளவு உடலை சுற்றிவருகின்றது ,

வெயிலின் சக்தியை கிரகித்தே  மரங்கள் வளருகின்றன மழைகாலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது ,

நீர்  எந்தளவுக்கு  விவசாயத்துக்கு  முக்கியமோ அதே  அளவு வெயிலின் உஷ்ன சக்த்தியும் மிகவும்  அவசியமானதாகும் ,

வியர்லை  எனும்  அற்பபுதமான உடல் கழிவுகளை வெளியேற்றும்  நிகழ்வு வெயில் காலத்திலேயே அதிகம்  நிகழ்ந்து நமது ஆரோக்கியத்தை உயர்த்துகின்றது,

 இந்த வியர்வையின் மூலமாக  சிறுநீரகங்களின் வேலை பளுவும்  குறைந்து  சிறுநீரகங்கள் பலம் பெறுவதும் வெயிலினால்தான் நடைபெறுகின்றது ,இதை அனுபவிக்காமல்
ஏசி  ரூம்களில்  முடங்கி  கிடக்கலாமா?  வெயிலை அனுபவியுங்கள்  அத்துடன்  உங்களது  ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள் .

மனிதர்கள் முன்று வகை

மனிதர்கள் முன்று வகை உண்டு

1.கஜ கர்ணம்🐘

2.அஜ கர்ணம்🐏

3.கோ கர்ணம்🐂

1. கஜகர்ணம் : -

யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !
அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...
அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

2. அஜகர்ணம் : -

ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
... அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

3.கோகர்ணம் :-

பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் ! அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் . இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

கிருபானந்த வாரியார்