Sunday, April 9, 2017

- வேதாத்திரி மகரிஷி

[07/04, 8:14 AM] ‪+91 91710 40806‬: "நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில் அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இதுதான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு.  இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் என்ற ஒரு நியதியை உணர்ந்து கொள்ள வேண்டும்.
.

எந்த பொருளும் அணுவினுடைய கூட்டு தான்.  ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.  அதிலிருந்து அலை வீசிக் கொண்டே இருக்கிறது.  எதிர்படும் ஒவ்வொரு அலையிலும் பதிவாகிறது.  அந்தப் பதிவு மீண்டும் மீண்டும் அதன் தன்மையாக (Character) மாறிவிடுகிறது.  இதையெல்லாம் பார்க்கும்பொழுது நாம் எந்த செயல் செய்தாலும் எந்த எண்ணம் எண்ணினாலும் அது நம் சொத்தாக கருமையத்தில் (Genetic Center) பதிவாகி விடுகின்றது.  அதற்கேற்ப விளைவு வருகிறது.  ஒரு மனிதனை நினைத்து அவன் நல்லவன் நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அவனை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.  அந்த அளவு நம் அலையே ஒரு நல்ல அலையாக மாறி,  அது செல்லும் இடமெல்லாம் அதே நல் விளைவைத் தரும்.
'

எண்ணத்தின் வலிமை:

"எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்
எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்திடல்".
.

"செயல்ஒழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம்,
சிக்கனம், இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்".
.

எண்ணத்தில் நிறைந்திடு :

"விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ
எண்ணத்தில் நிறைந்திடு, செய்கையில் சிறந்திடு."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
[07/04, 8:14 AM] ‪+91 91710 40806‬: உணர்ச்சிகளில்
மயங்காமல்
வாழும்
தெளிவு
நிலையே
விழிப்புநிலை
ஆகும்.

வாழ்க வளமுடன்! !

- வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment