Sunday, April 9, 2017

பித்தம் குறைய எளிய பானம் தேவையான பொருட்கள்

பித்தம் குறைய எளிய பானம்
தேவையான பொருட்கள்
சீரகம் – 4 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 10 எண்ணிக்கை
காய்ந்த திராட்சை – 30 எண்ணிக்கை
பூண்டு – 3 பல் பூண்டு
கறிவேப்பிலை – 3 கொத்து காம்புடன்
பனைவெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
மேலே உள்ள பொருட்களை (1/2) அரை லிட்டர் தண்ணீரில் கலந்து இரவில் நன்றாக கொதிக்க வைக்கவும். 100 மில்லியாக ஆகும் வரை. பிறகு இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலை இலோசாக சூடாக்கி வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்தவும். 1 மணி நேரம் கழித்து வழக்கமான உணவு எடுத்துக்கொள்ளவும். வாரத்தில் 3 நாட்கள் அருந்தலாம். பித்தத்தில் மாறுபாடு தெரிந்த பின் வாரத்தில் 1 நாள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு: ஒருமுறை உபயோகித்த பொருட்களை பானத்தை வடிக்கட்டியவுடன் கீழே போட்டு விடவும். மறுபடியும் அதை உபயோகிக்க கூடாது.
அனுபவமுறை...

No comments:

Post a Comment